பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

அதனால்
இரவின் வாரல், ஐய விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே. - கலி 49



வளைந்த வரியையுடைய புலி வந்து போர் செய்தலால் அதனை வென்ற வருத்தத்துடன் பெரிய மலையில் உறங்கும் யானை அவ்யானை நனவில் தான் போரிட்டு வென்றது மனத்தில் இருத்தலால் அதைக் கனவில் கண்டு அஞ்சி எழும்பின் புதிதாய் மலர்ந்து நின்ற வேங்கை மரத்தைப் புலி என்று நினைந்து அந்த மரத்தின் அழகிய நலத்தைக் கெடுக்கும். சினந் தணியும் அம் மரத்தைக் காணும்போது அதைப் பார்க்கவும் செய்யாமல் நாணித் தலை கவிழ்ந்து போகும். இத்தகைய இயல்பு வாய்த்த நல்ல மலை நாடனே!

மலரும் பருவம் கொண்ட அழகிய மலர் போன்ற கண்களையுடைய இத் தலைவியிடம் நீ இன்றியமையாத காதல் உடையவனாக உள்ளாய் என்று கூறும் சொல்லோ இனியது இது போக வரியை ஆராய்ந்து பார்க்கும் கண், முன்னாக இடி இடிக்கின்றது எனக் கருதாமல், மழை பொழிகின்றது என்று கருதாமல், இத்தகைய துன்பம் மிக்க அரிய வழியில் இவ் இடத்தில் நீ வரும் நிலைமை எமக்குத் துன்பத்தைத் தருவதாக உள்ளது

இன்பம் அடையும்படி அன்பு காட்டுவதால் இவளிடம் நீ மிக்க காதல் உடையவனாய் உள்ளாய் என்று கூறும் சொல்லோ இனியது அதுபோக, மணம் கமழ்கின்ற மாலையை உடையவனாய் முகில் தவழ்கின்ற பக்க மலையை ஊடறுத்துச் சூரர மகளிர் உள்ள அரிய வழியில் இவ் இடத்தில் நீ வரும் நிலைமை எமக்குத் துன்பத்தைத் தருகின்றது.

இருளுடன் மாறுபடும் கரிய கூந்தலையுடைய எம் தலைவியான இவளிடம் நீ சிறந்த அருளை உடையவனாய் உள்ளாய் எனச் சொல்லும் சொல்லோ இனிது அது போக வேலைக் கையில் கொண்டு தான் ஒருவன் துணையில்லாமல் நான் ஒருவனே செல்கின்றேன் என்று கருதாமல் யானை திரிகின்ற அரிய வழியிலே, இங்கு நீ வருகின்றமை எமக்குத் துன்பத்தைத் தருகிறது