பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அன்பொடு புணர்ந்த ஐந்தினை - குறிஞ்சி

பிடித்து வருத்தினான் அதனால் நான் வருந்தி, “தாயே! இவன் செய்த ஒரு செயலைக் காண்பாய் நீ!” என்று உரைத்தேன் தாயும் அலறிக்கொண்டு ஓடி வந்தாள் அவன் செய்த செயலை மறைத்து யான் “இவன் நீர் குடிக்கும்போது விக்கல் எடுக்க அதனால் வருந்தினான் என்றேன். நான் உரைத்ததைக் கேட்டுத் தாயும் அவனது முதுகைப் பல முறை தடவினாள். அப்போது அக் கள்வன் மகன் தன் கடைக் கண்ணால் என்னைக் கொல்பவன் போல் பார்த்துத் தன் மகிழ்ச்சி தரும் புன்முறுவலால் என் உள்ளத்தில் புகுந்தான்.

474. இவள் வதுவை நான் ஒடுக்கம் காண்பேன்

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,
கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்:

தாமரைக் கண்ணியே. தண் நறுஞ் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின்,
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறுஉம்
அணங்கு என அஞ்சுவர், சிறுகுடியோரே.

ஈர்ந் தண் ஆடையை எல்லி மாலையை,
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீ வரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
‘களிறு என ஆர்ப்பவர் எனல் காவலரே.

ஆர மார்பினை அண்ணலை, அளியை,
ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின்
‘கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி என்று ஒர்க்கும், இக் கலி கேழ் ஊரே.
என ஆங்கு
விலங்கு ஒரார், மெய் ஒர்ப்பின், இவள் வாழாள்;

இவள் அன்றி
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்: