பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரைத. கோவேந்தன்



அதனால் பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல்; ஆங்கு,
புதுவை போலும் நின் வரவும், அவள்

வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே.
- கலி 52

யானையின் முறத்தைப் போன்ற செவியை மறைவிட மாய்க் கொண்டு பாய்ந்து மாறுபாடு செய்த புலியைச் சினந்து, மறம் பொருந்திய நூற்றுவர் தலைவனான துரி யோதனனைத் தொடையில் உள்ள உயிரைப் போக்குகின்ற வீமனைப் போன்று, தன் நீண்ட கொம்பின் கூர்மையான முனையினால் குத்தி, புலியின் மார்பைப் பிளந்து பகைமை நீங்கிய யானை, அது மல்லரின் மறத்தை அழித்த திருமால் போல் கல் உயர்ந்த அகன்ற சாரலில் தன் சுற்றத்துடனே திரியும். இவ் இயல்யுடைய நாடனே! யான் கூறுவதைக் கேட்பாயாக!

தாமரை மலர் அணிந்தவனாய்க், குளிர்ந்த நறுமணச் சந்தனத்தைப் பூசியவனாய், ஒன்றை ஒன்று ஒத்த இதழ்களால் கட்டிய மாலையை உடைய தலைவி கூறிய குறியிடத்தில் நீ வருவாயானால், மணம் கமழ்கின்ற நாற்றத்தையுடைய மலையில் நின்று பலியைப் பெற்றுக் கொள்ளும் அணங்குகளில் ஒர் அணங்கு என்று எண்ணிச் சிறு குடியில் உள்ளவர் அச்சம் கொள்வர்

மழைத் துளியால் நனைந்த ஆடையை உடையவனாய் நீ இரவில் புணர்ச்சிக்குரியவற்றை அணியும் இயல்பையுடை யனாய், நீ வரைந்து கொள்வதை விட்டு, தோழியர் விரும்பும் மயிரையுடையவள் செய்த குறியில் வருவாயானால், நீ செய்யும் குறிகளால், ஒளி விளங்கும் குறைக் கொள்ளியையும் கவணையும் வில்லையும் உயைவராய்க் களிறு வந்ததென்று எண்ணித் தினைப்புனத்தைக் காப்பவர் ஆரவாரம் செய்வர்.

மாலை அணிந்த மார்பை உடையவனாய்த தலைமைத் தன்மை பெற்றவனாய், அருள் கொண்டவனாய், செய்த குறியில் நீ வந்தால் உன்னைக் கண்டு விலங்கு முதலியவை அஞ்சி ஒடும் அவ்வாறு ஒடும் ஒசையால், மிளகுக் கொடி வளர்ந்த மலையிலே உலவும் புலி என்று இந்தச் செருக்குக் கொண்ட ஊர் நினைக்கும்