பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

153



விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை
முனிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை
தளி பெறத் தகை பெற்றாங்கு, நின்

அளி பெற தந்தும், இவள் ஆய் நுதற் கவினே.
- கலி 53

வற்கடத்தை அறியாத சுரபுன்னை மரங்கள் நெருங்கிய பக்க மலையையும் வெற்றியையும் கொண்ட மலையின் அகன்ற பறையில் வாழ்கின்ற தான் விரும்பி பெண் யானை தன்னிடத்தே உள்ளது தனக்கு மாறான யானையைத் தன் மனத்தில் கொண்ட வலிமையால் அதன் புள்ளியையுடைய நெற்றியைப் புண்படுத்திய மறம் மிக்க யானை குத்தி எடுத்த கொம்பைப் போல உயர்ந்த அரும்பையுடைய காந்தள் நாள் தோறும் புதுமையை உண்டாக்கும் பள்ளங்கள் எல்லாம் நீர் நிறைந்து அழகு உண்டாகுமாறு அருவிகள் ஆரவாரத்துடன் இழியும். அதற்குக் காரணமான பயனைத் தரும் மழையை உடைய பெருமை அமைந்த வெற்றியையுடைய வெற்பனே!

அயலில் உள்ளவர் பழி கூறித் துற்றுவதால் கண்கள் இயற்கையான தம் நலத்தை இழந்தன அம்மட்டில் நில்லாது பின்னர்க் கண்கள் கயல் மீன் கக்கும் நீர் போல நீர் விழாத காலத்துக் களவிடத்துக் கூடி, அக் களவொழுக்கத்தை மேற் கொண்டு தலைவியைக் கூடிப் பிரிந்த பின்பு முன்கையில் உள்ள வளைகள் நெகிழ்ந்து கழல்கின்றன கலுழ அவ் வருத்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கவும் கூடும் ஆனால் அதனால் பயன் என்ன? அக் கண்கள் அதற்குக் கண்ணிர் சிந்தாது இருப்பதில்லையே!

ஊரார் பழி சொல்வதால் நறுமணமுடைய நெற்றி ஒளி குன்றிப் பீர்க்கம் பூவின் அழகைத் தான் அடைந்து பிறைச் சந்திரன் போன்ற அழகை இழவாத போது, இயற்கைப் புணர்ச்சியில் பிரியமாட்டேன் எனத் தெளிவுபடுத்திப்பிரியவும் செய்து பின் துன்பமாகுமாறு நீ பிரியின் இவளுக்கு வருத்தம் மிகும். இவளது வருத்தம் தெய்வத்தால் வந்ததென்று கருதித் தெய்வத்துக்கு வழிபாடு செய்யாதிருத்தலும் கூடும்.அதனால் பயன் என்ன? அந்த நெற்றி தன் நலம் கெடாதிருப்பதில்லையே! பகலில் அழகானது கெடும்படி எம்மை நலியும்படி செய்த நடுங்குதற்குக் காரணமான வருத்தம் இரவில்கனவி