பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

அன்பொடு புணர்ந்த ஐநதிணை - குறிஞ்சி

வன்மையையும், மிக்க மதத்தையும் உடைய யானையின் கொம்புகளைவிடச் சினம் கொண்டவையாய் உள்ளன. இந்தக் கொடுமை நின் இந்த இளமைப் பருவத்துக்குத் தக்கதோ?

இத் தகையனவற்றை யான் கூற, அதற்கு ஒன்றும் கூறாமல் கவிழ்ந்து நிலத்தைப் பார்த்துப் பின்பு அங்குத் தன் தோழியரை நினைப்பவள் போல் துணையாய் அமைந்த தோழியரைப் பார்த்தவளாய் அவள் எனது அறிவைத் தன்னிடத்தே கைக் கொண்டு தன் வீட்டுக்கு மீண்டு சென்றாள் என்றான் தனக்குள் தலைவன்

480. மடல் ஏறுவேன்

வார் உறு வணர் ஐம்பால், வணங்கு
இறை நெடு மென்தோள்,
பேர் எழில் மலர் உண் கண்,
பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று முகை வெண் பல்
கொடி புரையும் நுசுப்பினாய்,
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை,

ஆர் உயிர் வெளவிக்கொண்டு
அறிந்தியாது இறப்பாய் கேள்:
உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக,
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர் இல் நோய்செய்யும் கவின்அறிந்து, அணிந்து, தம்
வளைமையான் போத்தந்த நூமர் தவறுஇல் என்பாய்.
 
நடை மெலிந்து அயர்வு உறிஇ நாளும் என்நலியும் நோய்
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்,
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நூமர் தவறு இல் என்பாய்.

அல்லல் கூர்ந்து அழிவுற, அனங்காகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்,
ஒல்லையே உயிர் வெளவும் உருஅறிந்து, அணிந்து, தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்.