பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

165



உருளிழாய்”“ஒளிவாட இவன் உள்நோய் யாது” என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நிற்பழிக்குங்கால்
பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?

ஆய்தொடி!"ஐது உயிர்த்து, இவன்உள்நோய் யாது” என்னும்
நோய் இலை இவட்கு” என நொதுமலர் பழிக்குங்கால்,
சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ
நறுநுதலவரொடு, நக்கது நன்கு இயைவதோ?
என ஆங்கு

அனையவை உளையபும், யான் தனக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்!
செய்ததன் பயம் பற்று விடாது;
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே.
- கவி. 59

கட்டு அவிழ்ந்ததும் அரும்புகள் நீரின் மேல் உயர்ந்த பசிய இலையைக் கொண்டதும் ஆன தாமரை வளையம் போல் விளங்கும் முத்துப் பதித்த திரண்டு விளங்கும் தொடியணிந்த முன்கை, மலை அடுக்கம் எல்லாம் மணம் கமழும் கூர்மை யான அழகிய இதழ்களை உடைய காந்தளின் வடியுடைய துடுப்பு எனச் சொல்லும்படி தம்மில் ஒத்த மென்மையான இத்தகைய உன் முன் கையினால், இங்குலிகம் எழுதப் பெற்ற விரிந்த தொழில்களை உடைய வாய்களைப் பெற்ற மரத்தால் செய்த சிறு பானையும் பாவையும் கொண்டு விளையாடுதற்கு, உள்ளே இடப்பட்ட மணியுடைய அழகிய சிலம்புகள் மிகுதியாய் ஆரவாரம் செய்யச் சில அடியிட்டு நடக்கும் உன்னுடைய இளமை நீங்குவதால், பின்னி விடப் பட்ட நின் கூந்தலைக் கண்டு என்னிடம் உண்டான அறிவு முதலியவை என்னை விட்டுப் போகுமாறு போகின்றவளே!

யான் மயக்கம் அடைவதால் அதைக் கண்டு தானும் மருட்சி கொண்டு “இவன் அடைந்த நோய் தான் எது வென்று கேட்கும் அருள் இவட்கு இல்லை’ என்று நான் சொல்லவும், அதைக் கேட்டுப் பிறர் உன்னைப் பழிப்பர் அங்ஙனம் பழிக்கும் அளவில் கூர்மையான பற்களை உடைய இளம் மங்கையர்க்கு நடுவே பகுப்புடைய கோலத்தால்