பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

175

தலைவன் குறை இரக்கின்றமைக்கு ஏற்ப உன்னை நானே அழைத்துக் கொண்டு விடுவது போல் நடிப்பேன் நீயும் அந்த நாடகத்துக்கு ஏற்ப நடி என்றாள் தோழி

அதைக் கேட்ட தலைவி தலைவன் இரக்கும் அங்கு நீ வாராய்; இன்னமும் ஒருகால் அவனிடம் போய் உன் வேண்டுகோளை முடித்தலைத் தன் கடமையாய்க் கொண்டு அவள் (நான்) தலைவனின் கூட்டத்துக்கு உடம் பட்டேன் என்று அவனிடம் கூற வேண்டா. இதற்கு என் மெய் தொட்டுச் சூள் கூறுவாயாக!” என்று தோழிக்கு உரைத்தாள்.

அதைக் கேட்ட தோழி'யான் சொன்ன குற்றம் இதுவோ? இனி இது செய்ய வேண்டியதைச் சுருங்கக் கேள், உன்னுடன் இதனை நான் ஆராயும் காலத்தில் நீயும் நாணத்தால் நிலத்தைக் கால் விரலால் கீறி என்னுடனே வேறுபட்டு நின்றனை இது செய்வதற்கு எளியதன்றோ! பின் இப்படியே அவனுடன் நின்று இங்ஙனமே செய்வது எளிதன்றோ” என்றாள் தோழி

486. தேமல் நீங்குதற்கு வழி

அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும்,
மணி முகம், மா மழை, நின் பின் ஒப்ப, பின்னின்கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும்
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு.

ஏஎ, எல்லா மொழிவது கண்டை, இஃது ஒத்தன்;
தொய்யில்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்,
உழுவது உடையமோ, யாம்.

உழுதாய்
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய் யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த