பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



குவளையும், நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி.

எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு:
முற்று எழில் நீல மலர் என உற்ற,
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய் இனி.

நல்லாய்: இகுளை கேள்:
ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்,
வேந்த கொண்டன்ன பல.

ஆங்கு ஆக அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ,
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
உத்தி எறிந்துவிடற்கு' - கலி 64

உன் அழகிய முகம் நிலவை போன்றது. மணிகள் விளங்கும் உன் பின்னப்பட்ட மயிர் முகத்துக்கு ஒப்பான வெண்மதி பொருந்தும் கரிய முகிலினைப் போன்றது அப் பின்னிய கூந்தலில் உள்ள நூலால் கட்டிய தேனினால் ஈரமான இதழ் களை உடைய மலர்கள் பின்னலுக்கு ஒப்பான கரிய பாம்பினிடத்தே பொருந்தி, அதன் கரிய நிறத்துக்கு மாறுபட்ட கார்த்திகை என்னும் விண்மீனைப் போன்றது. இத்தகைய இயல்புடைய மனத்தால் ஒப்புக் கண்டவர்களை வருத்தத்தைச் செய்து விடும் தழைத்த கூந்தலை உடையவளே! நீ என் இகழும் நிலைமையைக் கைவிட்டு நான் சொல்வதை மனத் தால் ஆராய்ந்து பார் முன்னம் நீ என் காரணமாகப் பெரியபொன் பெற்றனை

முன்னம் இடைவிடாது கூடிய கூட்டத்தால் தோற்றப் பொலிவைப் பெற்றாய் என்று தலைவன் சொல்லி, இடைக் காலத்தில் வாராதிருந்தால் உண்டான வருத்தத்தைப் போக்கினான் அதனை எமக்குப் பெரும் பொன் கடன் பட்டவை ஆவாய் என நகைச் சுவைபடக் கூறினான்