பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

177

“இவன் ஒருவனால் தோற்றப் பொலிவு நான் அடைந்தேன் என்று இவன் சொல்லும் சொல்லைப் பார்!" என்று தலைவி தன் மனத்துக்குக் கூறினாள் பின் அவள் நீ என் தோள் மேல் தொய்யில் எழுதிக் கனவு போல் சில சமயம் தங்கின தால் உண்டான தோற்றப் பொலிவு எனக்கு உண்டானதுண்டு ஆனால் என் முலையால் நின் மார்பிடத்து இடை விடாது உழுவதைப் பெற்றேனா? அங்ஙனம் பெறவில்லையே!” என்று அவள் சொன்னாள்.

தலைவன் அவளை நோக்கி, "வண்டுகள் ஒலிக்கும் மலரால் ஆன மாலையை உடைய அழகு பொருந்திய நல்லவளே! நீ உழுதாய் என் மார்பான நிலத்தை நீ உழுதாய் அதனால் பொன் பொலிவு பெற்றாய் இக் களவொழுக்கத்திலும் மென் தோளின் மீது யான் எழுதிய கரும்பு போன்ற பொலிவு எல்லாம் நின் முலைகள் இடைவிடாமல் புணர்ந்ததால் உண்டான பயன் அன்றோ? அதனுடன் குற்றம் அற்ற ஒளியை யுடைய முகம் குவளை மலருடன் மாறுபட்டுப் புணரும் போதெல்லாம் பொலிவு உண்டாகுமாறு பூத்த கண்களின் தோற்றப் பொலிவு நீ இடைவிடாது புணர்ந்ததால் உண்டான தன்றோ? முல்லை அரும்புடன் மாறுபடும் பற்களை உடையவளே, இத் தோற்றப் பொலிவுகளன்றி வேறு தோற்றப் பொலிவு ஏற்படும்படி புணர்வாயாக!” என்றான்

உன் கருத்து இடைவிடாது புணர்வது தான் என்றால் புணர்வாயாக’ என்றான் என்றது நின்னை மணந்து கொள்வேன் என்பதாகும்.

அதைக் கேட்ட தலைவி, “தலைவ! என் உறுப்புகளில் தோற்றப் பொலிவு உண்டாயுள்ளன எனச் சொல்லாமல் என் தோள்களில நின்னால் எழுதப்பட்ட கரும்பிற்குத் தோற்றப் பொலிவு உண்டு என்று கூறு நான் ஏற்றுக் கொள்கின்றேன் இனி மலர்ந்த அழகு குலைந்து அழகையுடைய நீல மலர் என்று பிறர் சொல்லும்படியாய் வருத்தம் அடைந்த இரும் பால் அரியப்பட்ட மா வடு போன்ற கண்களுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் பெரும் பசப்பு உண்டு எனச் சொல்வாய்!"

அதைக் கேட்ட தலைவன் “நல்லவளே, தோழியே, நான் சொல்வதைக் கேள்: மன்னனைச் சேர்ந்து அவனது செல்வத்தை