பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

179



முதுபார்ப்பான் அஞ்சினன் ஆதல்அறிந்து, யான், எஞ்சாது
ஒரு கை மணல் கொண்டு, மேல் துவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே.
ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ் கடுங்கண்,
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஒர்
ஏதில் குறு நரி பட்டற்றால் காதலன்
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை - என்றும் தன்
வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து. - கலி 65

திருந்திய அணிகளை அணிந்தவளே, ஒரு பார்ப்பான் அவன் மயிர் நீங்கிய தட்டையான தலையினை உடையவன்; கருங் குட்டத்தினால் காலும் கையும் குறையப் பெற்றவன்; கடமையை மேற் கொண்டு வந்து நம் தெருவினின்றும் போகாமல் ஒளிந்து திரியும் முடமானவன், முதிர்ந்தவன் அவனைப் பேணுவாய் என்று நீ பலகாலும் கூறுவாய் அதை நான் ஏற்காமல் உயிர்கள் யாவும் ஒன்றாக உறங்கும் இரவில் அழகிய போர்வையால் போர்த்தி அழகு பெற உடுத்து நம் தலைவன் செய்யும் குறியை எதிர் பார்த்து நின்றேன் அப்போது அந்தப் பார்ப்பானால் இரவுக் காலத்தே பெரிய சிரிக்கத் தக்க நிகழ்ச்சி நிகழ்ந்தது அந் நகைக்குரிய நிகழ்ச்சி ஊர் எல்லாம் நகைத்தற்கு உரியதாய் இருந்தது அது நிகழ்ந்த வண்ணத்தைக் கேட்பாயாக அவன் அங்குக் குனிந்து பார்த்து, “மகளிர் வரும் காலம் இதுவன்று இந் நேரத்தில் நின்ற நீ யார்?’ என்று முதலில் சொன்னான் பின், “சிறியவளே! நீ என்னால் பிடித்துக் கொள்ளப்பட்டாய்” என்று சொன்னான் மெல்ல வணங்கினான் வைக்கோலைக் கண்ட முதிய எருதினைப் பொல் என் பக்கத்தினின்று போகாமல் நின்றான் “பெண்ணே தாம்பூலம் உண்பாய்!” என்று பாக்குள்ள பையைக் குலைத்து, “நீ எடுத்துக் கொள்:” என்றான் நான் அதற்கு ஒரு சொல்லும் சொல்லவில்லை, பேசாமல் நின்றேன் அதனால் அவன் அஞ்சித் தன் முன்னைய நிலையை மாற்றிக் கொண்டான் “பெண் பேய் ஆகிய உன்னை ஒழித்த ஆண் பேய் நான் எனக்கு அருள்வாய் அங்ஙனம் அருளாமல்