பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

185

அணி மிகு வரி மிஞ்று ஆர்ப்ப, தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறுந் தொடையல், வெண் போழ் கண்ணி,
நலம் பெறு சென்னி, நாம் உற மிலைச்சி,
பைங் காற் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ செந் தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப, சாந்து அருந்தி,
மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்று படு நறுந் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற, வீங்கு இறைத் தடக் கையின்,
வண்ண வளி வில் ஏந்தி, அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயங்கு அறக் கட்டி,
இயல் அணிப் பொலிந்த ஈகை வான்
கழல் துயல் வருந்தோறும் திருந்து அடிக் கலாவ--

தலைவனின் நாய்க்கு அஞ்சி - விலகுதல்

முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்
பகை புறம் கண்ட பல் வேல் இளைஞரின்
உரவுச் சினம் செருக்கி, துன்னுதொறும் வெகுளும்,
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையாக் கண்ண வளைகுடி நெரிதர,
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து, யாம்
இடும்பை கூர் மனந்தேம் மருண்டு புலம் படர--

தலைவன் மகளிடம் வினாதல்

மாறு பொருது ஒட்டிய புகல்வின் வேறு புலத்து
ஆ காண் விடையின், அணி பெற வந்து - எம்
அலமரல், ஆயிடை, வெரூஉல் அஞ்சி,
மெல்லிய இனிய மே வரக் கிளந்து, எம்
ஐம்பால்ஆய் கவின் ஏத்தி, “ஒண் தொடி
அசை மென் சாயல், அவ்வாங்கு உந்தி,