பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
வந்தனன்.ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து,
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு -
‘அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே.

- வடம வண்ணக்கண் பேரிசாத்தனார் அக 38

“வானைத் தீண்டும் மலைகளையுடைய நம் தலைவன் விரிந்த கொத்துகளையுடைய வேங்கை மலரால் ஆன வண்டுகள் மொய்க்கும் தலை மாலை அணிந்தவனாய், ஆராய்ந்து எடுக்கப்பட்ட குவளை மலரால் ஆன தேன் துளிக்கும் மாலை அணிந்த மார்பினனாய், அழகிய வில் இடப் பக்கத்து இருப்பக் கடிய விரைவை யுடைய வலியமைந்த அம்புகளை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு' தலைவியைக் காணக் கூடுமோ என்று வருந்தி இன்று வருதலும் மெய்ம்மை அவ்வாறு அத் தலைவன் வரின் அழகிய தளிர்களை உடைய அசோகின் தாழ்தல் இல்லாது ஓங்கிய கிளையில் தொடுத்த தொங்கும் கயிற்றால் ஆன ஊசல் இல்லாத இடம் யானும் தலைவியும் ஒருங்கே பாய்ந்து விளையாடாததால் கலங்கா தனவாய்த் தெளிந்து நீண்ட இதழ்கள் பொருந்தியதால் அழகு பெற்றுள்ள நீல மலர்கள் கண்போல் மலர்ந்த சுனை, அழகிய சிறகையுடைய இளங்கிளி, கொய்து சுமந்து செல்ல இயலாத பெரிய கதிர்களான வளைந்த சுமையை முறித்த கோலான தலையையுடைய தட்டைகள் பொருந்திய, கொய்து விட்ட தினைப்புனம் ஆகியவற்றையும் பார்த்து, அவ் இடங்களில் தலைவியைக் காண மாட்டாது நீள நினைந்து வருந்தித்