பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

21

திரும்பிச் செல்லமாட்டாது வருந்துவன் அல்லனோ! அடியவளான யான் எம் தலைவனுக்குச் செய்யக்கூடிய ஒன்றைச் செய்யவில்லை அஃது என்னவென்றால், சுனையினின்றும் வரும் வெண்மையான அருவிகளை உச்சியில் கொண்ட உயர்ந்த மலையில் கூப்பிடு தொலைவில் உள்ளதே எம் ஊர் என, அத் தலைவனைப் பிரிந்த இடத்து, அதனை அறிவுறுத் தலை நான் மறந்து விட்டேன் அதனால் என் அழகு கெடுவ தாகுக” எனத் தோழி தலைமகன் குறை கூறினாள்


386. யான் பெற்ற மகிழ்ச்சி

மவி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெளிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றுழ் வியன்குளம் நிறைய வீசி,
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே - சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே

- கபிலர் அக 42

“மிகுந்த மழையால் தழைத்த மாரிக் காலத்தில் மலர்கின்ற பித்திகத்தின் கொய்யப்படாத தன்மையுடைய மழைக்கு எழுச்சிபெற்ற மணம் பொருந்திய அரும்பின் சிவந்த பின் பக்கத்தைப் போன்று விளங்கும் வளமான கடையையுடைய கண்ணையும் தளிரைப் போன்ற மேனியையும் கொண்ட மாமை நிறத்தையுடையவளே! நெடுந்தொலைவில் உயர்ந்து தோன்றும் உயர்ந்த பக்க மலைகளையுடைய வானத்தை அளாவிய பெரியமலையை உடைய தலைவன் நாம் விரும்பிய படி மணந்து கொள்ள வந்தான் ஆதலால் நான் கொண்ட மகிழ்ச்சி பெரிது அது எத்தகையது என்றால், மழை பெய்யா-