பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

23

சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே.
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
மகனே, தோழி!' என்றனள்
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.

- தங்கால் முடக்கொற்றனார் அக 48

"தாயே, வாழ்க! யான் உரைப்பதை விரும்பிக் கேட்பாயாக: உன் மகள் ஆவின் பாலையும் உண்ணாது துன்பம் கொண்டாள்; மிகவும் பசந்துள்ளாள் இதற்குக் காரணம் யாது? என என்னை வினவுகின்றாய் அதற்குரிய காரணம் முன்னம் ஒரு நாள் மலர்கள் நிறைந்த மலைச் சாரலில் தோழியருடன் தழைத்த கிளையையுடைய வேங்கை மரத்தின் மலர்களைக் கொய்யச் சென்றோம் அப்போது 'புலி புலி' என்ற ஆரவாரம் எழுந்தது மகளிரின் கண்ணைப் போன்ற ஒளியுடைய அழகிய செங்கழுநீர் மலர்களைக் கோத்துச் சுற்றிக் கட்டிய மாலை அணிந்தவன், தலையின் ஒரு பக்கத்தே கொண்ட வெட்சிப் பூவால் ஆன கண்ணியை உடையவன், மகளிரின் மார்பில் பாய்வதற்குரிய மார்பில் சிவந்த சந்தனம் பூசியவன், வரிந்து கட்டிய வில்லை உடையவன், ஒப்பில்லாத அம்பை ஆராய்ந்து கைக் கொண்டவன் இத்தகைய ஒரு தலைவன் தோன்றினான் தோன்றி 'அப் புலி சென்ற வழி யாதோ?' என்று வினவியபடி நின்றான் நாங்கள் அவனைக் கண்டு ஒருவருக்குள் ஒருவராய் எங்கள் உடம்பு மறையும் படி உள்ளம் ஒடுங்கி நாணம் கொண்டு நின்றோம் விரும்பி மூவகையாக வகுக்கப்பட்ட கூந்தலையும் 'அழகிய நெற்றியையும் உடைய கரிய கூந்தலை உடைய மடவீர்! உம் வாயில் பொய்யும் உள்ளதோ' எனக் கூறினான் மலை நாட்டுக்குரிய அவன் குதிரைகளின் விரைவினை அடக்கி மெல்லெனச் செலுத்தும் தேரில் அமர்ந்து உன் மகளின் மையுண்ட கண்கள் அவனை, நோக்குங்கால் தான் நோக்காது இருந்தும், அவள் நோக்காமல் நிலத்தை நோக்குங்கால் தான் நோக்கியும் இங்ஙனம் ஒருவரை ஒருவர் மாறிப் பல முறையும் நோக்கிய பின் செல்லவில்லை பகற் பொழுது மாயும் - கதிரவன் மறையும் மாலைநேரத்தில் அவன் மறைந்திடும் திசையை நோக்கி,