பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
படு மழை பொழிந்த பர்னாட் கங்குல்,
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்
அருளான் - வாழி, தோழி! - அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
காயா மென் சினை தோய நீடிப்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.

- தங்காற் பொற்கொல்லனார் அக 108

"தோழி வாழ்க! புள்ளிகள் கொண்ட மயிலைக் கண்டு அஞ்சிப் பாம்பின் வருத்தத்தைத் தரும் அரிய நஞ்சையுடைய தலைகள் படத்தை விரித்தவை போல், காயாவின் மென்மை யான கொம்புகளைத் தீண்டுமாறு நீண்டு அரும்பிய பல மலர்களுடன் அசையும் காந்தள் அக் காந்தளின் அழகிய மலர்களில் தாவி நறிய தாதினை நுகர்கின்றன வண்டுகள் அவை மகளிர் கையால் ஆடும் வட்டுகளைப் போல் தோன் றும், அத்தகைய இடமான முகில்கள் தவழ்கின்ற உச்சிகளை யுடைய மலைநாட்டுத் தலைவன் நம் தலைவன். அவன், இரவிடை வருகின்றான் அதனால் நமக்கு என்ன பயன்? அன்பினால் நட்புக் கொண்டவரின் துன்பத்தைப் போக்கிப் பாதுகாத்தல் அறிவுடையார்க்குப் பொருந்தியதாகும் அதனை நம் தலைவன் செய்யவில்லை மலையில் முத்துக்கள் சிதறி யவைபோல் விளங்கும், யானையின் புள்ளிகளையுடைய முகத்தில் விழுந்த புதிய ஆலங்கட்டி பளிங்கினைச் சொரி வதைப் போல் பாறையில் விழுந்து அழகு செய்யும் முகில் கள் சினந்த எழுந்தாற்போன்ற இடம் அகன்ற வானத்தில் பொறிகளையுடைய கொள்ளிக் கட்டைகளைப் போல ஒழுங்குபட மின்னி மிக்க மழை பெய்யும் அத்தகைய நள்ளிர வின் இருளில், அரிய உயிர்களையே உணவாக உடைய, கொல்லும் தொழிலை யுடைய விலங்குகள் உலவும். இத்-