பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொகை - வகை - உரை த. கோவேந்தன்

49


பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சிப், பைப்பய
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கைக்
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வரத்
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவு கிளர் ஒவினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு;சோர்பு உறைப்ப
தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்;
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. - பரணர் அக 142

“நெஞ்சே, வாழ்க! நம் காதலியானவள், நெறி முறையினின்று வழுவாமல் நின்று போரிட்டுப் பெற்ற, உரல் போலும் அடியையுடைய யானையைப் பெற்றவன், நன்னன்’ என்ற மன்னன். அவனுக்குரிய ‘பாழி’ என்ற ஊரில் பலியூட்டுவதற்கு அரிய இயல்புடைய அஞ்சத் தக்க பேய்க்குப் பகைவரை வென்று அவருடைய குருதியை ஊட்டும் இயல் புடையவன் ‘மிஞிலி' என்பவன் பறவைகளுக்குக் காவலான பெரும்புகழ் கொண்ட வெள்ளம் போன்ற படையையுடைய அதிகன் என்பவனைக் கொன்று மகிழ்ந்தான். வாகை சூடினான் அப்போது ‘ஒள்வாள் அமலை' என்னும் வெற்றிக் கூத்து ஆடப்பட்டது அப் போர்க்களத்து அச் சமயத்தில் எழுந்த ஆரவாரம் போன்று பலரும் அறிந்து கூறும்  Invalid template invocation→அல}அலருக்கு-