பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

55

பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக;
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல் ந
கை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது
நோய் அசா வீட முயங்கினள் - வாய்மொழி
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய
வில்கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி
நேர் கொள் நெடுவரைக் கவாஅன்
சூரர மகளிரின் பெறற்கு அரியோளே.

-பரணர் அக 162

“நெஞ்சே! கொள்ளக் கொள்ளக் குறைவு படாததும், சங்குகள் வளரும் ஆழத்தை உடைமையால் அளப்பதற்கு அரியதும், கரிய தோற்றத்தைக் கொண்டதும் ஆகிய கடலைக் கண்டது போன்ற தோற்றம் உடைய வானம், அதில் தீக் கொடியைப் போன்ற மின்னல் முகிலைப் பிளந்து அசைந்து செல்லக் கடுமையாய் இடிக்கும் இடியுடன் விரைந்த நீரைச் சிந்தி முடிவிடம் காணாதபடி மேகம் மழை பொழியும் அத்தகைய நள் இரவு அரிய காத்தல் தொழிலைச் செய்யும் காவலர் தம் காவலைப் புறக்கணித்திருந்த சமயத்தைப் பார்த்துக் குளிர் பொருந்திய வாடைக் காற்று வருத்த, அவளது தந்தையின் மாளிகையில் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன் நிற்க வாய்மைச் சொல்லையும் நல்ல புகழை அடைவிக்கும் இரவலர்க்கு, அவர் விருப்பம் பிழையாதபடி கொடுக்கும் ஈகையையும் வார்க் கழலையும் வாகு வளையையும் அணிந்த, அதிகன் அவனது காய்க்கும் பயனை யுடைய பலா மரத்துடன் வேங்கை மரமும் பொலிவை