பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


புலிப்பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய்
இரும்பிடி இரியும் சோலைப்
பெருங்கல்யாணர்த்தம் சிறுகுடி யானே.

- அண்டர் மகன் குறுவழுதியார் அக 228

“தோழியே! தேனை உண்ணும் பல வண்டுகள் ஆர வாரிக்கக் 'கல்’ என்ற ஒசையுடன் மலையினின்றும் இறங்கும் அருவி அது சந்தன மரத்தில் வீழ்ந்து அதனைக் குளிர்ந்ததாக நனைக்கும் இவ் இயல்புடைய செறிந்த பக்க மலையில் உள்ள, விழியைப் போன்று மலர்ந்த, கரிய இதழையுடைய குவைள மலர்களையுடைய மலையில் உள்ள பெரிய சுனை யில் தலைவர் நம்முடன் இருந்து நீர் விளையாடிப் பகற் பொழுதை இனிதே நம்முடன் இருந்து கழிப்பாராக கழித்து, வானில் உள்ள பகல் போன்ற நிலவொளியில் பிரப்பங் காட்டினையுடைய சாரல் பொருந்திய வழியிலே, மலையின் மேலுள்ள வேங்கை மரத்தின் மலர்கள் புலியின் உடம்பில் உள்ள புள்ளிகளைப் போல் தோன்றுதலால், பெரிய வாயை யுற்ற பெண்யானை அஞ்சியோடும் இத் தன்மையுடைய சோலைகள் பொருந்திய பெரிய மலையிடத்தாகிய சிறிய குடியான ஊர்க்கு இரவில் நம்மைப் பிரிந்து செல்வாரா யினும் இனிதே செல்லுக”

424. தலைவனின் நட்பு வெறியாடலில்


காண்இனி வாழி, தோழி! பானாள்
மழைமுழங்கு அரவம் கேட்ட; கழைதின்
மாஅல் யானை புலிசெத்து வெரீஇ
இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங்கல் நாடன் கேண்மை, இனியே
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாட் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியல்அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கலி விழவுக்களம் கடுப்ப நாளும்
விரவுப்பூம் பலியொடு விரைஇ, அன்னை