பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அன்பொடு புணர்ந்த ஐந்தினை - குறிஞ்சி

சிவந்த வரிகளையுடைய கிளிகளை நம்முடன் இருந்து ஒட்டிய நம் தலைவன் அவன் நல்லியல்புகள் தருவதால் வந்த வருத்தத்தை அறியாதவளாகி, நம் தாய் நுட்பமான திறம் பொருந்திய தளிர் போன்ற எழுச்சியுடைய தன் மகளின் துன்பம் வந்த இயல்பை அறிய வேண்டும் என்றும் பல வகைப் பொருள்கள் கொண்ட பிரப்பங்கூடையைப் பலியாக வைத்து வெறியாடும் பெரிய களம் பொலியும்படித் துதித்து ஆட்டுக்குட்டியைப் பலி தர உள்ளனள் அதனைச் செய்வதற்கு முன்னம் - ஏறி இறங்கும்படியாகச் சேர்த்த தொலைவினும் சென்று விளங்கும் ஒளிகொண்ட வளை கழன்ற முன் கையும், நேரான சந்தையுடைய பெரிய தோளும், நல்ல அழகு நீங்குவதினின்று நீங்கிப் பழைய அழகைப் பெறுமாறு நாம் செல்வோம் சென்று, - தேன் கூடுகள் நிரம்பிய குளிர்ந்த குகைகளைக் கொண்ட பக்க மலைகள் பொருந்திய பெரிய மலையின் பிளப்புகள் மிக்க நீண்டு வளர்ந்த சிறிய இலை களையுடைய சந்தன மரத்தின் மென்மையான கிளைகள் தீண்டத் தேன் அடை தொங்கும் உயர்ந்த உச்சியைப் பெற்ற -மூங்கிலைத் தன்னகத்தே கொண்ட மலை நாடனின், முன்பு கூடிய மார்பை, அரும்பி வரும் தன்மையுடைய இளைய முலை மூழ்கப் பலமுறை தழுவுவது தக்கது” என்றாள் தலைவி

428. நிகழ்ச்சி நகைப்புக்குரியது


நகைநீ கேளாய் தோழி! அல்கல்
வயநாய் எறிந்து, வன்பறழ் தழிஇ
இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு
நால்முலைப் பினவல் சொலியக் கான்ஒழிந்து
அரும்புழை முடுக்கர் ஆள்குறித்து நின்ற
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது
‘அருவழி விலக்கும்எம் பெருவிறல் போன்'ம் என
எய்யாத பெயரும் குன்ற நாடன்
செறிஅளில் துடக்கலின், பரீஇப் புரிஅவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூச்சோர் மாலை