பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 79


430. இருளில் ஒளி குன்றும் மணி!

நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொல்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃதுஒல்லாய் -
தண்மழை தவழும் தாழ்நீர் நனந்தலைக்
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து
மாய இருள் அளை மாய்கல் போல
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்
மெல்இயற் குறுமகள் நல்அகம் நசைஇ
அரவு இரைதேரும் அஞ்சுவரு சிறுநெறி
இரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெருநகை யாகக்
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரும்படர் தலைத்தந் தோயே! - பரணர் அக 258

“என் நெஞ்சே! நீ வாழ்க! நன்னன் உதியன் என்பவனின் அருங் காவலைக் கொண்ட பாழிச் சிலம்பில் பழமை மிக்க வேளிர்கள் பாதுகாவல் செய்து தேடி வைத்த பொன்னைவிட அடைவதற்கு அரியவள் தலைவி என்பதை அறிந்திருந்தும் அவளை நாம் நெருங்க மாட்டோம் என்று. யான் கூறினும் அங்ஙனம் என் கூற்றிற்கு உடன்படாமல் - மென்மைத் தன்மை பெற்ற உன் நல்ல உள்ளத்தில் விரும்பினாய் விரும்பிப் பாம்புகள் இரையைத் தேடித் திரியும் அச்சம் பொருந்திய சிறிய வழியில் இரவுப் பொழுதில் சென்றும் அவளைப் பெறாதவள் ஆயினாய் ஆனதால் கண்டவர்க்கு அருள் உண்டாகப் புல் என்ற கண்ணை உடையையாய்த் தனிமை மேவி உலகில் உள்ளவர்க்கு எல்லாம் பெரிய இகழ்ச்சி ஏற்படக் காமம் அளவு கடந்து உண்டாதலால் அருந்துன்பத்தை என்னிடம் உண்டாக்கினாய் குளிர்ந்த முகில்கள் தவழ்ந்து பாயும் அருவி நீரையுடைய அகன்ற இடம் பொருந்திய கடிய காற்றுச் சுழலும் நீண்ட பெரிய குன்றில் மயக்கத்தைத் தரும் இருளுடைய குகையில் ஒளியில்லாது மறையும்