பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

குறிப்பால் உணர்ந்து மெல்ல ‘தோழியே! வருந்தாதே! நம்மைத் துறந்து போன தலைவர் காலம் தாழ்த்தாது இப் போதே விரைந்து வருவார்’ என்று சொல்லி எனக்குத் துணை யாகித் துயிலாமல் என்னுடன் கூடியிருந்த என் தோழியாய இவள் மகிழ்ந்தது எனக்கு இனிமையாய் இருந்தது:” என்று இரவு வந்த தலைவனிடம் தலைவி சொன்னாள்

439. தாயின் ஐயத்தின் விளைவு

சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றறும்.
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ்சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் - காதல் அம் 'தோழி’
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல்
கிளி பட விளைந்தமை அறிந்தும், 'செல்க’ என
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு
பல் கால் நோக்கும் - அறன் இல் யாயே

- மதுரை அறுவை வாணிகன் அக 302

“அன்பு பொருந்திய தோழியே மழையில் நீண்டு வளர்ந்த செவ்வாழையின் இலைகள் அசைகின்ற காற்று மோதுந் தோறும் உறங்கும் யானையின் பருத்த உடலைத் தழுவும். இத் தன்மையுடைய நல்ல மலை நாட்டினையுடைய நம் தலைவனுடன் இனி நாம் அருவி நீரில் ஆடியும், சுனையில் உள்ள நீலப் பூக்களைப் பறித்தும், நறுமணமுடைய மலர் களைப் பெற்ற வேங்கைமரத்தின் வண்டுகள் ஒலிக்கும் மணம் வீசும் சோலையில் விரும்பி விளையாடியும் செய்பவை அரி யவை போலும்! பெருங்கற்களை கொண்ட பக்க மலையில் என் தமையன்மார் உழுத இடத்தில் கரும்பைப் போன்று