பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன் :

93

மணந்து கொள்ளும் அதனையே விரும்பி இரவில் வருதலான துன்பம் நீங்க, மணந்து கொள்வதை எண்ணும் ஆதலால், காந்தள் மலரையுடைய இந்தச் சிறிய ஊரின் அலரைப் போற்றாது உயர்வான மலையினின்றும் இறங்கும் மழையால் ஆன அருவி நீரில், நம் தலைவனின் மார்பு தெப்பமாகச் சிவந்த வரி பரந்த குளிர்ந்த கண்கள் சிவந்திட நாம் நாளை மகிழ்ந்து ஆடுவோம் வருவாயாக!

மூங்கில் நெருங்கிய பக்கமலை மறையக் கால் இறங்கி, இனிய இசை பொருந்திய முரசினைப் போன்று ஒலித்து, பகைவர் ஒடும் முதுகைக் கண்ட முழந்தாளைப் பொருந்தும் நீண்ட கையையுடைய போர் வெல்லும் பாண்டியன் வென்று, செல்லும் போரில் எடுத்துத் தூக்கிய கொல்லும் வேல் போல ஒழுங்குபட மின்னி, மழை பரவியுள்ளது நீ காண் பாயாக!” என்று தலைவி தோழிக்குக் கூறினாள்

442. வர வேண்டா இரவில்



கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமும் நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவிப் பட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே
எம் உறுதுயரமொடு யாம் இவண் ஒழிய
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே - வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!

- கபிலர் அக 318

“மலையினின்றும் விழுகின்ற அருவியினது முழக்கத் துடன் வண்டுகள் தண்ணுமையின் ஒலியுடன் கூடிச் சேர்ந்து இசைக்கும் யாழ் நரம்பின் ஒலிபோல ஒலிக்கும் பழைமை