பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

யான வெற்றியையும் அகன்ற நிலப்பரப்பையும் பயன் தரும் மலையையும் உடைய நாட்டின் தலைவனே!

காட்டில் உள்ள விலங்குகள் செல்லும் நெறியில் யானை களும் இயங்கும் வானத்தின் மிக உயர்ந்த இடத்தில் இடியும் முழங்கும் மேலும் அந்த வழிகள் பாம்பையும் புலியையும் யாவரும் அஞ்சும்படி உடையன இத்தகைய ஒடுங்கிய சிறிய நெறியில் இரவு நேரத்தில் நீ தன்னந் தனியனாய் வருகின்றாய்! நீ தலைவியை மணந்து கொள்வதை விரும்பினும் அவ் வாறே பெறுவாய் ஆகவே, ஒன்று, இன்று முதலாக இங்கு வராதே அல்லது நீ வருவாயானால் யாங்கள் இங்குத் துயரத் தினின்று நீங்கிடுமாறு, என்னைக் கண்டு நீங்கும் காலத்து, உன் மலைகள் பொருந்திய சிற்றுரை அடைந்த பின்பு, வேட்டை யாடுங் காலத்தில் மூங்கில் காட்டில் பிரிந்த நின் வேட்டுவர் களுடன் நாய்களை அழைக்கும் குறிப்பைக் கொண்டுள்ள ஊது கொம்பைச் சிறிது ஊதுதல் வேண்டும்” என்று இரவுக் குறி வந்த தலைவனை மணம் வேண்டி தோழி கூறினாள்

443. தலைவி பெறற்கரியவள்!



வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடுஉ நின்று அலைப்ப
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகி
தேம்புதிகொல்லோ? - நெஞ்சே! -உரும் இசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானைக் கடுந் தேர்த் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
குறை ஆர் கொடுவளி குழுமும் சாரல்
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை
புகல் அரும், பொதியில் போலப்
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!

- பரணர் அக 322