பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

103


முறி திமிர்ந்து உதிர்த்த கையள், அறிவு அளுர் உறுவி ஆய் மட நிலையே?

- தொண்டைமான் இளந்திரையன் நற் 106

“பாக பெரிய கடலில் மோதும் அலைகளால் சேர்க்கப் பட்ட மணல்மேட்டில் மணம் வீச, விளையாடும், புள்ளி களையுடைய நண்டு ஒடிற்று அப்போது அதனைத் துரத்த முடியாதவளாகித் தலைவி களைப்புற்றாள் துரத்தும் எண்ணத்தைக் கைவிட்ட அந்தக் குற்றமற்ற இள மகளிடத் திலே யான் வருத்தத்தோடு சென்றேன். சென்று பொருள் தேடப் போக வேண்டும் என்ற என் உட்கருத்தை வெளி யிட்டேன். அதுகேட்ட அவள் மறுமொழி கூற முடியாதவள் ஆனாள். நறிய மலரையுடைய ஞாழல் மர்த்தின் அழகிய கிளையில் தாழ்ந்த பூங்கொத்தைக் கொய்தாள். அதனொடு இளந் தளிரையும் கையால் தடவி உதிர்த்தாள். அறிவு மயக்க முற்றவளாகி மடப்ப நிலையோடு இருந்தாள். அதனை நீ அறிதலும் அறிதியோ? நீ விரைவாகத் தேரைச் செலுத்துக" என்று தலைவன் பாகனிடம் கூறினான்

192. வருந்தாதே அத்த இருப்பைப் பூவின் அன்ன துய்த்தலை இறவொடு தொகை மீன் பெlஇயர், வரி வலைப் பரதவர் கருவினைச் சிறாஅர், மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குத், திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, நிணம் பெய் தோணியர் இகுமணல் இழிதரும் பெருங் கழிப் பாக்கம் கல்லென வருமே - தோழி - கொண்கன் தேரே.

- ஆசிரியர் ? நற் 11 “காட்டிலிருக்கும் இருப்பைப் பூப் போன்ற மெல்லிய தலையையுடையன இறால் மீன்கள். அவற்றோடு தொகுதி யான மற்றைய மீன்களையும் பெற விரும்புவர் பரதவர். கட்டிய வலையையுடைய பரதவரின் வலிய தொழிலைச்