பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


செய்யும் சிறுவர்கள் மீன் பிடிக்கும் திமிலில் ஏறிக் கொண்டு கடலுள் நீந்திப் போவர் அது, மருண்டு தங்கி நிற்கும் மான் கூட்டத்தைப் பிடித்துக் கட்டும் பொருட்டுப் பெரு வலிமை யுடைய வேட்டுவச் சிறுவர்கள் விரும்பி எழுந்தது போல் இருக்கும். கடலுள் சென்ற சிறுவர்கள் வாள் போன்ற வாயை யுடைய மீன்களையும் மற்றைய வலிய மீன்களையும் பிடித்து அறுத்துத் துண்டாக்குவார்கள். அத் துண்டாகிய நிணத்தைத் தோணியில் போட்டுக் கொண்டு வந்து தாழ்ந்து கிடக்கும் மணலில் இறக்குவர் அங்குப் பெரிய கழிகள் சூழ்ந்த பாக்கம் இருக்கும். அப் பாக்கம் கல் என ஒலிக்குமாறு நெய்தல் நிலத் தலைவனின் தேர் வரும் ஆதலால் நீ மகிழ்ச்சியாய் இரு” என்றாள் தோழி.

193. அதிக நாள்கள் வாழேன்

பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஒதம் இல் இறந்து மலிர, வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன் கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரச், செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்கப், புலம்பொடு வந்த புன்கண் மாலை அன்னர் உன்னார் கழியின், பல் நாள் வாழலென்- வாழி, தோழி - என் கண் பிணி பிறிதாகக் கூறுவர்; பழி பிறிது ஆகல் பண்புமார் அன்றே.

- குன்றியனார் நற் 117 "தோழி, பெரிய கடல் முழங்கவும், கானல் மலரவும், கரிய கழியிலுள்ள வெள்ளம் இல்லம் கடந்து பெருகவும், பெரிய இதழ்களையுடைய நெய்தல் மலர்கள் கூம்பவும், பறவைகள் ஒருசேர மணம் வீசும் பூவுள்ள இளமரக் காவின் கூடுகளில் சேரவும், பல இடங்களிலும் செல்லும் கதிர்கள் ஒளி குறையச் சிவந்து மறையும் ஞாயிறு மலையில் சேரவும், நினைவுத் துன்பம் நெருங்கிச் சேர்ந்து யான் நடுங்கும்படி வருத்தத்தோடு வந்த துயரம் தரும் மாலை நேரத்தில் அவர்