பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


உரைப்பாயாக’ என்று தைைலவன் உணரும் வண்ணம் தோழி தலைவிக்கு உரைப்பவள் போன்று கூறினாள்.

195. நீங்காது வாழ்வாயாக!

ஒன்று இல் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன்; அதுதான்ும் வந்தன்றுநீங்கல்; வாழியர் ஐய, - ஈங்கை முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் தெண் நீர்க் குமிழி இழிதரும் தண்ணிர் ததைஇ நின்ற பொழுதே. 4

- மோசி கண்ணத்தனார் நற் 124 "ஐய, அன்றிலில் ஒன்று இல்லாதபோது மற்றது இறந்து போகும். அதுபோல தனிமையோடு தங்கியிருக்கும் துன்ப மான வாழ்க்கையை யானும் ஆற்றமாட்டேன். அது தான்ும் வந்தது எம்மை விட்டு நீங்காதிருப்பீராக. வாழ்க ஈங்கையின் அரும்பு மலர்ந்த பூவும் காட்டு மல்லிகையும் பெரிய மணல் மேட்டில் கிடந்தவை மானின் வலிய குளம்பால் மூழ்கின. வெள்ளியை உருக்கும் கொள்கலத்தில் இட்டு உருக்கிச் சாய்த்தாற் போல விருப்பம் உண்டாகும்படி தெளிந்த நீர்க்குமிழியாக வாழும் தண்ணிரைப் பெற்று நின்ற கூதிர்ப் பருவம் வந்தது” எனத் தலைவனால் பிரிவை உணர்த்தப் பட்ட தோழி தலைவனுக்கு உரைத்தாள்.

196. அவன் வருவதால் பயன் என்ன?

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, உவன் வரின், எவனோ? - பாணl - பேதை கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், வண்டல் ஆயமொடு பண்டு தான்் ஆடிய ஈனாப் பாவை தலையிட்டு ஒரும்,