பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,

நள்ளென் கங்குலும், வருமரோ -

அம்ம வாழி, - அவர் தேர் மணிக் குரலே!

- நம்பி குட்டுவன் நற் 145

“பெரிய அலை உப்பங்கழியை மோதுகிறது. ஈரமான மணலைக் கொண்டுவந்து கொட்டுகிறது. அங்கே வலிய அடும்பின் கொடி வளர்ந்திருக்கிறது. அதன் சிறந்த இதழை யுடைய மலரைக் கூந்தலையுடைய பெண்கள் கொய்து பூமாலை ஆக்குகின்றனர். அவ்வாறாய அழகிய கடற்கரைத் துறைவர் தாம் விரும்பும் நட்புள்ள காதலர். அவர் நட்பு நுண்ணியதாக ஒத்தில்லாத போதும் நம்மோடு நெருங்கிய நட்புள்ளது போல் உணர்ந்து கொண்டு, “அவன் யார்” என்று அறமில்லாத அன்னை வினவுகிறாள். நீயும் உன் எழிலை என்னால் அறிதற்கும் உரியவள். பருத்த அடியையுடைய புன்னை மரமிருக்கும் நம் சேரியில் அவர் தேரின் மணியி லிருந்து எழும் குரல் இருள் செறிந்த இரவிலும் மெல்ல வரும். அது நமக்கு இப்போது இன்னாதது. வரைந்து கொள் வாரானால் நல்லது” என்று இரவுக்குறி வரும் தலைவன் கேட்டுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வான் என்ற எண்ண முடன் தோழி உரைத்தாள்.

203. புறப்பட்டுச் செல் உன் தலைவனுடன் சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச், சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, அலந்தனென் வாழி - தோழி! - கானல் புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, நடு நாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனோடு செலவு அயர்ந்திசினால், யானே;

அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!

- உலோச்சனார் நற் 149