பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தந்தது. யான் எவ்வாறு ஆவேனோ? யான் இரங்கத் தக்கவன்.” என்று மடலேறக் கருதிய தலைவன் தோழியின் முன் வேறொருவருடன் பேசுவதுபோல் கூறினான்.

205. தெரியவில்லையே யார் என்று!

'ஒள் இழை மகளிரொடு ஒரையும் ஆடாய், வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய், விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய், யாரையோ? நிற் தொழுதனேம் வினவுதும்; கண்டோர் தண்டா நலத்தை - தெண் திரைப் பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ? இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ? சொல், இனி, மடந்தை, என்றனென். அதன் எதிர் முள் எயிற்று முறுவல் திறந்தன; பல் இதழ் உண்கணும் பரந்தவால், பணியே.

- பராயனார் நற் 155 “ஒளியுள்ள அணிகள் அணிந்த மகளிரொடு பாவை செய்து விளையாடும் ஒரை விளையாட்டும் விளையாட மாட்டாய். பெரிய இதழ்களையுடைய நெய்தற் பூவால் புனைந்த மாலை களையும் அணியமாட்டாய். விரிந்த பூவுள்ள கடற்கரைச் சோலையின் ஒரு பக்கம் நின்றவளே, நீ யார்? உன்னைத் தொழுது வினைவுகின்றேன். கண்டவரால் நிலை நீங்காத கெடாத நலத்தையுடையவளே, தெளிந்த அலைகளையுடைய பெரிய கடற்பரப்பில் அமர்ந்து வாழும் அணங்கோ நீ? பெரிய கழியின் பக்கத்தில் நிலைபெற்று உள்ளாயோ நீ? ஏ பெண்ணே! பதில் சொல்’ என்று வினவினேன். அதற்கு விடையாக, முள் போன்ற பல் தெரியும்படி முறுவல் வெளி வந்தது. தாமரை மலர் போன்ற கண்களிலும் கண்ணிர்த் துளிகள் பரந்தன.” என்று தலைவியை எதிர்ப்பட்ட தலைவன் அவள் தோற்றங்கண்டு தன் நெஞ்சை நோக்கிக் கூறினான்.

206. தேர் வந்து தங்குவதாக ஒலியுடன்! மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் உரவுத் திரை கொழிஇய பூ மலி பெருந் துறை,