பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

121


வளைந்த அணிகலன்களையும் அணிந்தவர். அக் காதலரோடு நாம் இனிமையாக இருந்து விளையாடிய இக் கடற்கரைச் சோலை இந்த ஊரோடு இனி எப்படி ஆகுமோ?” என்று பகற்குறி வந்து தலைவன் திரும்பிச் செல்லும் வேளை தலைவி தனக்குள் கூறிக் கொண்டாள்.

214. தேர் வந்து திரும்பியது

'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த வண்டல் பாவை வன முலை முற்றத்து, ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, எல்லி வந்தன்றோ தேர்?’ எனச் சொல்லி, அலர் எழுந்தன்று இவ் ஊரே பலருளும் என் நோக்கினளே அன்னை, நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், அணிக் கவின் உண்மையோ அரிதே மணிக் கழி நறும் பூங்கானல் வந்து, அவர் வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.

- உலோச்சனார் நற் 191 “சிறு மலர்களையுடைய ஞாழல் மரத்தின் தேன் பொருந்தி யிருக்கும் ஒள்ளிய கொத்துகள் செவ்விய அணி கலன் பூண்ட மகளிர் ஒழுங்குபட்ட மணலில் அமைத்த வண்டலால் செய்த விளையாட்டுப் பாவையின் அழகிய கொங்கையில் ஒள்ளிய புள்ளியுடைய தேமல் போல மெல்லி தாகப் படுமாறு பரவி இருக்கும் - கண்டல் மர வேலியுடைய அழகிய சிறுகுடியில் தேர் ஒன்று இரவில் வந்தது” எனச் சொல்லி இவ் ஊரில் அலர் எழுந்தது அப்போது பலர் இருக்கவும் அன்னை என்னையே நோக்கினாள். நாளை அழகிய கழி முள்ளிப்பூவை யான் பறிக்கவில்லையானால் என் மிக்க அழகு இருப்பது அரிது. அழகிய கழியிடத்துள்ள நறிய பூ மிகுந்த கானலில் வந்து தலைவர் நம்மைப் பார்க்கா மல் வறிதே தேரில் திரும்பிப் போதல் எம்மை இற்செறித்த அதனினும் அரிய துன்பமாகும்” என்று களவின்பத்தில்