பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


சோலையில் பகற்குறி வந்து நம் உடலழைச் சிதையச் செய்து பெயர்ந்து போயினன் தலைவன். ஆயினும் அவன் குளிர்ந்த மாலையைப் பூண்ட மார்பில் வண்டுகள் ஒலித்து ஊத, ஒலிக்கும் மணி பூண்ட குதிரை பூட்டிய தேரைச் செலுத்தி வரைவொடு வருவான். ஆழமான நீர்ச் சேர்ப்பன் அவ்வாறு வரும் வழியைக் குன்றுபோல் தோன்றும் திரண்ட மணலில் ஏறிக் கண்டுவரச் செல்வோமா?” என்று திருமணத்திற்கு வருவான் தலைவன் எனத் தோழி கூறினாள்.

228. வளையல்கள் உடைய முயங்குக

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு, அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே! முன்கை வார் கோல் எல் வளை உடைய வாங்கி, முயங்கு எனக்கலுழ்த்த இவ் ஊர் எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?

- குன்றியனார் நற் 239 "இறங்கிய ஞாயிறு மேற்கு மலையில் மறைந்தது மயங்கின மாலை நேரத்தில் குடியால் மகிழ்ந்த பரதவர் இனிதிற் பெற்ற பெரிய மீன்களை எளிதில் விற்றனர். நண்டு விளையாடிய புலால் மனக்கும் மணல் முன்றிலையுடையது அழகிய சிறுகுடி அதற்குச் செல்லும் ஒழுங்குபட்ட வழி யில் ஆய்ந்த நீலமணியின் மொட்டு அவிழ்ந்தது போல நெய்தலின் புல்லிய இதழ் குவிந்த மலர் கெடும்படியாகப் பரதவர் மிதித்துச் செல்வர். அவ்வாறாய வளப்பமான கரிய கழியுள்ள கடல் நீர்ச் சேர்ப்பற்கு யாம் உடன்பட்டுத் தொழில் கேட்டோமில்லை அப்படியிருக்க “முன் கையில் அமைந்த நெடிய கோல் தொழிலமைந்த ஒளி வளைகள் உடைய