பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

137


“உடல் வளைந்த ஆண் நாரை ஒன்று. அதன் பேடை முதற் கருப்பத் துன்பத்தோடு இருந்தது. வளைந்த வாயைக் கொண்டிருந்தது. அது கடற்கரைக்கு வராமல் மருதநில வயலிலேயே தங்கியிருந்தது. அதற்கு இரை கொடுக்க விரும்பிய முடமுதிர் நாரை வேட்டைக்கு எழுந்தது. கடலில் மீனைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தது. அவ்வாறாய நெய்தல் நிலத் தலைவனைக் கண்டு, தலைவியாகிய உன் பிறைபோன்ற அழகு இழந்த நெற்றியையும், முன்கை வரை நில்லாத வளையல்களையும், மறைக்காமல் ஊரவர் அலர் துற்றும் பழியையும், நாம் சொல்லவேண்டும். ஆனால் அந்த உரையை அவற்கு நாம் நாணைவிட்டு எடுத்துரைக்கவில்லை. ஆயினும் மையுண்ட உன் கண்களின் நீர்த்துளிகளே நாம் பலமுறை மறைத்து வைத்தாலும் நிலை நில்லாது கைமிகுந்து உரைத்துவிட்டன. நாம் யாது செய்வோம்” என்று தலைவன் சிறைப்புறமாக இருந்தபோது தோழி மணம் செய்திடத் துரண்டி உரைத்தாள்.

234. காமம் பெருகியது நொச்சி மா.அரும்பு அன்ன கண்ண எக்க ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, இலங்கு எயிற்று ஏனர் இன் நகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் மணம் கமழ் நறு விவரிக்கும் துறைவன் - தனனொடு புணர்த்த இன் அமர் கானல், தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என, வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய, சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப, இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், 'இவை மகன் என்னாஅளவை, வய மான் தோன்றல் வந்து நின்றனனே. - கபிலர் நற் 267 “விளங்கும் பற்களோடு அழகிய இனிய நகையையுடைய பெண்கள் காய வைத்த தினையைக் கை விரல்களால் துழாவு வர். அதுபோல நொச்சியின் கரிய அரும்பு போன்ற கண் களையுடைய மணல் மேட்டினுள் வாழும் நண்டின் பெரிய