பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


எம் தோள் துறந்தனன் ஆயின்

எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே? - ஐங் 108

தோழி, செவிலியை நோக்கி; “தாயே! நான் கூறுவதை விருப்பத்துடன் கேட்பாய். நீர்க் கழியில் உள்ளனவாகிய முள்ளிகள் மலரும் கடற் சேர்ப்பன் எம் தோளைக் கூடுவ தனை விட்டு நீங்குவானாயின் அவனால் விரும்பப்பட்ட தோள்கள் என்னவாகும்?” என்று வினவினாள்.

9. தலைவன் சொற்கள் மனத்தில்

அன்னை, வாழி! வேண்டு அன்னை நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் என் தோள் துறந்த காலை எவன்கொல் பன்னாள் வரும், அவன் அளித்த போழ்தே? - ஐங் 109 தோழி, “தாயே! நான் சொல்வதைக் கேட்பாயாக நெய்தலின் நீர்க்குள் படர்ந்து ஓடிப் பூக்கும் கொடியினுடைய மலர்கள் பொருந்திய துறைவனான தலைமகன் பண்டு கூடி எம்மைத் தலையன்பு செய்தபோது அவன் தெளியச் சொன்ன சொற்கள் வரைவிடை வைத்துப் பிரிந்த இப்போது பின் முறையும் எம் மனத்தில் எழுந்தபடியே உள்ளன காரணம் யாதோ கூறுக” என்று வினவினாள்

10. வாழிய பாலே!

அன்னை, வாழி! வேண்டு அன்னை - புன்னை பொன்னிறம் விரியும் பூக் கெழு துறைவனை ‘என்னை என்றும், யாமே! இவ் ஊர் பிறிது ஒன்றாகக் கூறும், ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே? - ஐங் ti0 தோழி, "தாயே! இதை விரும்பிக் கேள்: புன்னையின் பொன் நிறம் உடைய மலர்கள் எங்கும் பரந்து உதிர்ந்து கிடக்கும் துறையை உடையவன் தலைவன். அத் தகையவனை யாம் என்ன என்று சொன்னோமாக, இவ் ஊரில் உள்ளவர் வேறொன்றாகக் கூறுவர் ஆதலால், ஊழ் அவ் வண்ணமும் ஆக்குமோ?” என்று செவிலிக்குச் சொன்னாள்