பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

145


நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ - வில் எறி பஞ்சி போல, மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் நற் 299 “நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த தாழையின் வெள்ளை நிறமான பூக்கள் அச்சம் விளைக்கும் யானையின் உடைந்த கொம்புபோலக் காணப்படும். அசையும் கடிய மேல்காற்று வீசுதலாலே அப் பூக்கள் நுண்ணிய தாதுகளை, ஒளிமிகு கலன் அணிந்த மகளிர் விளையாட்டாகக் கட்டிய சிற்றில்லில் உதிர்க்கும் தாதுகள் பரந்துகிடக்கும். வில்லால் அடிபட்ட பஞ்சுபோலப் பெருகிய அலைகளிலே காற்று வீசுவதால் வயங்கிய பிசிர்கள் பொங்கும் நளி கடற்சேர்ப்பனொடு மகிழாத நாளில் இருந்தும் இல்லாதேம் போல ஆதலை உணர்கின்றேன்” என்று தலைவன் மறைவாக இருந்தபோது தோழி கூறினாள். r

244. துஞ்சாக் கண்ணள் துயரால் மெலிந்தாள் ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளெனக், கலிகெழு பாக்கம் துயில் படிந்தன்றே, தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், நம்வயின் வருந்தும், நன்னுதல் என்பது உண்டுகொல்? - வாழி. தோழி - தெண் கடல் வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் கொடு முடி அவ் வலை பளியப் போக்கிக், கடு முரண் எறி சுறா வழங்கும் நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தான்ே.

- மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் நற் 303 “ஒலியெல்லாம் ஒய்ந்து அடங்கி நள்ளிரவு வந்தது செருக்கு மிகுந்த பாக்கம் துயிலில் ஆழ்ந்தது தெளிந்த கடலில் வலிய கையையுடைய பரதவர் மீன்பிடிக்கச் செல்வர்