பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


இனிய ஒலி கேட்டலோ அரிதாய் உள்ளதே" என்று பழிச் சொல்லால் அஞ்சி ஆற்றாத தலைவி தோழியிடம் முறை

-

யிட்டாள்.

247. விழுமிய நட்பு வீணாவதுவோ?

ஈண்டு பெருந் தெய்வத்து - யாண்டு பல கழிந்தெனப், பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடைகொண்டு, மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி, நல் எருது நடை வளம் வைத்தென, உழவர் புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ ஞாழலொடுகெழிஇய புன்னை அம்கொழு நிழல் முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும் விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறும், நற்கு அறியாய் ஆயின், எம் போல், ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர், மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.

- அம்மூவனார் நற் 315 “நல்ல எருது நடைச் சிறப்பு நீங்கியதான்ால் அதற்கு உரிமையாளரான உழவர் அதனை வைத்துத் தொழில் செய்யாது புல்லையுடைய தோட்டத்திலே மேய்வதற்கு விட்டுவிடுவர். அதுபோல, பெருந் தெய்வத்தின் ஆணைப்படி கூடிய யாண்டுகள் பல கழிந்து போயின என்பதாலும் பாறையை அடுத்த துறையிடத்திலே கடல் நீர் அலைத்தலால் பக்கம் கொண்டு மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய உதவாது ஒழிந்தாலும் முரிந்த குறட்டையுடைய அம்பி என்னும் ஒடத்திற்கு நறிய மணமுடைய நல்ல புகை போடா மல் சிறிய மலரையுடைய ஞாழல் மரத்தோடு சேர்ந்த புன்னை மரத்தின் அழகிய செழிப்பான நிழலிலே அந்த மரத்தின் குடமுழாப் போன்ற அடிப்பாகத்தில் அம்பியைக் கட்டிப் போடுவர். அவ்வாறாய துறைவனே, கேள். நன்றாக வும் சிறப்பாகவும் கொண்ட நட்பு நட்பாகாமல் தவறிப் போகும் என்பதனை நீ நன்கு அறியாமற்போனால், உன்னை விரும்புவோர் பெருந் துன்பம் அடைவர். எம்மைப் போல்,