பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

149


நெகிழ்ந்த தோளும் அழுத கண்ணும் உடையவராய், மலர்

தீப்பட்டு தீய்ந்து போனது போன்ற நிலையை அடைவர்”

என்று பரத்தை தலைவனை நொந்துரைத்தாள்.

248. மீன் கண்துஞ்சும் யான் கண் துஞ்சேன்

ஒதமும் ஒலி ஒவின்றே ஊதையும் தாது உளர் கானல் தவ்வென்றன்றே; மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில், கூகைச் சேவல் குராலோடு ஏறி, ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்; பாவை அன்ன பலர் ஆய் வனப்பின், தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள் சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி, மீன் கண் துஞ்சும் பொழுதும், யான் கண் துஞ்சேன், யாதுகொல் நிலையே?

- வினைத்தொழில் சோகீரனார் நற் 319 "கடலும் ஒலி அடங்கிற்று. ஊதைக் காற்றும் பூந்துகள் உதிரும் சோலையில் தவ்வென்று அடங்கிற்று. மணல் மிக்க மூதூரின் அகன்ற நீண்ட தெருவில் ஆண் கூகை பெண் கூகையோடு சென்று பெரிய சதுக்கத்தில் அச்சம் உண்டாகும் படி கூவும். மயங்கிய இருளையுடைய நடு நாளில் பேய்கள் வெளிக் கிளம்பும், பாவையன்ன பலரும் புகழும் அழகும் அகன்ற மெல்லிய பருத்த தோளுமுடைய என் இளமை மிக்க காதலியின் தேமல் படர்ந்த அழகிய கொங்கையைத் தழுவ நினைத்து மீன்கள் உறங்கும் நேரத்திலும் யான் கண் உறங்காமல் உள்ளேன். என் நிலை யாதாகுமோ?” என்று தலைவிக் குற்ற காப்பு மிகுதியால் தலைவன் தன்னுள் சொல்லினான்.

249. நேரம் குறித்தேன் மறவாது வருக ஓங்கித் தோன்றும், தீம்கள், பெண்ணை நடுவணதுவேதெய்ய - மடவரல் ஆயமும் யானும் அறியாது அவன