பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்; புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் தெரி மணி கேட்டலும் அரிதே; வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.

- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் நற் 323 "உன் மாயமான நட்பினால் உன் நல்ல காதலியின் மாட்சிமைப்பட்ட நலம் தொலைந்தது. உன் உறவைக் கொண்ட, வளையல் அணிந்த முன் கைகளையுடைய நல்லவ ளான அவள் தந்தையின் சிறு குடிப்பாக்கம், இனிய கள் வடியும், ஒங்கித் தோன்றும் பனை மரங்களின் நடுவில் உள்ளது. அங்கே மட நோக்குடைய ஆயமும் யானும் ஒருவரை ஒருவர் அறியாதபடி இருப்போம். அங்கே புலியின் வரி போன்ற மணல்மேட்டில் இருக்கும் புன்னை மரம் உதிர்த்த தாது நிரம்பிய பூக்களில் தேன் எடுக்க ஊதும் ஆண் - பெண் வண்டுகள் முரலும். இந்த இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் உன் திண்ணிய தேரின் விளங்கிய மணி ஒலிக்கும் ஒசையைப் பிறர் கேட்டு அறிய முடியாது. அங்கு வரும் வழி இதோ இது. மறவாது அங்கு வருக” என்று தோழி இரவுக் குறிக்கு உடன்பட்டுரைத்தாள்.

250. சாதலும் இனிதே காதல் தோழி நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், பாடு இலகலுழும் கண்ணொடு சாஅய்ச் சாதலும் இனிதே - காதல்அம் தோழி!அந் நிலை அல்ல.ஆயினும், சான்றோர் கடன்நிலை குன்றலும் இலர் என்று, உடன் அமர்ந்து, உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய தாயம் ஆகலும் உரித்தே - போது அவிழ் புன்னை ஒங்கிய கானல் தண்ணம் துறைவன் சாயல் மார்பே. - அம்மூவனார் நற் 327