பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

151


“நம்மை நாடி வந்த சான்றோரை விரும்புதல் பழி என்றால், உறக்கம் இல்லாது கலங்கி அழும் கண்களோடு வருந்தி மெலிந்து சாதலும் இனியதே. அன்புமிக்க தோழி, அப்படிச் சாதல் கிடைக்காவிட்டாலும், “சான்றோர், கடமையைச் செய்யும் நிலையிலிருந்து தவற மாட்டார்” என்று ஒருசேர உலகம் கூறும் மொழி உண்மையாகுமாறு அவர் மார்பு நிலையான உரிமையாக ஆவது கூடும். சாதல் அல்லது மார்பு என்ற இரண்டில் ஒன்று கிடைத்தால் நல்லது. அரும்பு கள் மலரும்படியான புன்னை மரங்கள் நிரம்பியிருக்கும் சோலைக்கு உரிமையுடையவரும் குளிர்ந்த நீர்த் துறைக்குத் தலைவருமான நம் தலைவருடைய மார்பு மென்மையான மார்பு நாம் பெறுவதற்கு உரிமையுடையது” என்று மணவாது காலம் நீட்டிக்கும் காதலனால் வருந்திய தலைவி தோழி யிடம் சொன்னாள்.

251. இனிதே நம் ஊர் இரவில் வருக!

உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி, கானல் இட்ட காவற் குப்பைப், புலவு மீன் உணங்கல் படு புள் ஒப்பி, மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, 'எந்தை திமில், இது, நுந்தை திமில் என வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்பl இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்; இனி, வரின் தவறும் இல்லை; எனையது உம் பிறர் பிறர் அறிதல் யாவது - தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

- உலோச்சனார் நற் 331 “உழாத உழவராகிய பரதவர் உவர் நிலத்திலே விளைத்த உப்பை வாங்கும் வண்டியுடைய உப்பு வாணிகர் வரும் காலம் பார்த்துக், காவலையுடைய உப்புக் குவியலைக் கானலில் இட்டு வைப்பர். அங்கே பரதவர் மகளிர் புலவு நாறும் மீன்களைக் காய வைப்பர். அப்போது மீனைக் கவர வந்து