பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டெனக், கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட நின் அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி, அன்னை தந்த அலங்கல் வான் கோடு அலைத்தாங்கு நோதல் அஞ்சி, அடைந்ததற்கு இணையல் என்னும் என்ப மனை இருந்து, இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் திண் திமில் விளக்கம் எண்ணும் கண்டல் வேலிக் கழி நல் ஊரே. - உலோச்சனார் நற் 372 "தோழியே, உப்பங்கழி சேர்ந்த சோலையிலுள்ள பனை மரத்தின் தேனுடைய குளிர்ந்த பழம் மூக்கு இற்றுப் பெரிய இதழ்கொண்ட நெய்தல் வருந்த அள்ளல் இருஞ்சேற்றில் விழுந்து ஆழ்ந்து விட்டது. அதனால் குருகுக் கூட்டம் பறக்கும் துறைவன், வளைந்த சங்கு போன்ற வெண் மண லிடத்தில், விரும்பிய தலைமை உள்ளத்தோடு பொருந்தி இருந்தான்் மகளிர் மனையிலிருந்து, கரிய கழியிடத்து மீனைத் தேடும் குளிர்ந்த தலையுடைய கழி சூழ்ந்த நம் நல்ல ஊர் அன்னை இனிதாக நோக்கி உனக்குத் தந்த அசையும் பெரிய புள் ஒட்டும் கோல் உலைந்ததற்கு நீ வருந்துவதாகக் கருதி அஞ்சி, "நடந்ததற்கு நீ வருந்தாதே" என்று கூறுவள். அதனால் வீட்டில் வைத்தார். ஆதலின் நீ வருந்துவது தக்கதன்று. இனி இற்செறியார்” என்று தோழி தலைவி பொறுத்திருக்கக் கூறினாள்.

262. நன்னுதல் உவப்ப நறுமணம் புரிக

நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிரக் கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்பப் அன்பு இலை ஆதலின், தன் புலன் நயந்த என்னும் நானும் நன்னுதல் உவப்ப, வருவை ஆயினோ நன்றே பெருங் கடல் இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை