பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270. மணந்து கொள் இவளை வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, புள் இறைகூரும் மெல்லம் புலம்பlநெய்தல் உண்கண் பைதல கலுழ, பிரிதல் எண்ணினைஆயின், நன்றும் அரிது உற்றனையால் - பெரும உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி, மணம் கமழ்ப்ாக்கத்துப்பகுக்கும் வளம்கெழு தொண்டி அன்ன இவள் நலனே.

- அம்மூவனார் அக 10 பெரிய கடற்பரப்பில் உண்டாகும் அலைத் திவலை களை ஏற்றுக் கொண்ட, விண்மீன் போன்ற மெல்லிய அரும்புகள் மலர்ந்துள்ள முடமான புன்னை மரத்தின் பெரிய நிலையை உடைய கரிய கிளையில் பறவைகள் தங்கியிருக்கும் மெல்லரும்பு உதிர்ந்த கடற்கரைக்குத் தலைவனே! பெரும! நீ எம் தலைவியின் நெய்தல் பூவைப் போன்ற கண்கள் துன்பம்