பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

15


மாலை வந்தன்று, மன்ற -

காலை அன்ன காலை முந்துறுத்தே. - ஜங் 116

தலைவி தன் தோழியை நோக்கி, “தோழி! கேள், நீல நிறம் பொருந்திய கழியில் நீல மலர்கள் குவிகின்ற இருள் மாலைப் போது, நாம் அழுது வருந்துமாறு, நாட்காலைப் போது போலும் ஒளி மாலைப் போதினை முன்னால் அனுப்பி விட்டு, பின் வருவதாயிற்று. தெளிவாகக் காண் பாயாக’ என்று கூறினாள்.

17. நன்றி மறத்தல் கூடாது அம்ம வாழி, தோழி! நலனே இன்னது ஆகுதல் கொடிதே - புன்னை அணிமலர் துறைதொறும் வரிக்கும் மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே. - ஐங் 117 தலைவி, "தோழியே கேட்பாயாக, புன்னை, மரத்தின் அழகிய மலர்கள் துறைதோறும் படிந்து கோலம் செய்யும் தெளிந்த நீரை உடைய சேர்ப்பன் தந்த நலத்தை உடையோம் யாம். ஆதலால் அந்த நலம் இத் தன்மை உடையதாதல் கொடியது. ஆகவே, அதை மறந்து கூறுபவர் கூறுவனவற்றைக் கூறாதே" என்றாள்.

18. வருத்தத்துடன் மீண்டேன்! அம்ம வாழி, தோழி யான் இன்று அறனிலாளற் கண்ட பொழுதில், சினவுவென் தகைக்குவென் சென்றனென்; பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே. - ஐங் 118 தலைவி, “தோழியே கேட்பாயாக யான் இன்று அந்த அறம் அற்ற தலைவனைக் கண்ட போது சினந்து, இனி இங்கு வராதே எனத் தடுத்திடச் சென்றேன். பின்பு அது செய்வதால் நமக்கே இழிவாம் என்று கருதி வருத்தம் கொண்டு மீண்டேன்” என்று தோழிக்குச் சொன்னாள்

19. அன்பற்றவன்!

அம்ம வாழி, தோழி! நன்றும் எய்யாமையின் ஏதில பற்றி,