பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அடைந்து வருந்துமாறு பிரிந்து வாழ்தலை நினைத்தாயா யின் நுகர்தற்கரிய தீவினையைச் செய்து அதன் பயனைத் துய்தவனாகின்றாய் கீழ்க்காற்றினால் உந்தப்படும் பேரலை களையுடைய கடல் மோதி உடைக்கின்ற எக்கர் மணலானது தம் திமிலை உடைத்திட, அதனால் புதிய வலைகளை உடைய வராயிருந்தும் பரதவர் வேட்டைக்குச் செல்லவில்லை உயர்ந்த மணலால் ஆன கரையில் தாமே வந்து அகப்பட்ட சுறா மீனைப் பிடித்து வந்து, மணம் வீசும் பக்கத்தில் அங்கு வாழ் பவர்க்குப் பகுத்துக் கொடுத்தற்குக் காரணமான தொண்டிப் பட்டினம் அப் பட்டினத்தைப் போன்ற எம் பெருமாட்டியின் அழகு அவளுக்கே உரியதாகுமாறு நீ அவளையும் அழைத்துக் கொண்டு உன் ஊர்க்குப் போதல் வேண்டும் இதுவே இப் போது நீ செய்யக் கூடியது என்றாள் தோழி. 271. கடிகிறாள் அன்னை

பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழு மீன் உணங்கற் படு புள் ஒப்பி, எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, கொண்டல் இடு மணல் குரவை முனையின் வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் பல் பூங் கானல் அல்கினம் வருதல் கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை கடி கொண்டனளே - தோழி - பெருந் துறை, எல்லையும் இரவும் என்னாது, கல்லென வலவன் ஆய்ந்த வண் பரி நிலவு மணல் கொட்கும் ஒர் தேர் உண்டு எனவே.

- உலோச்சனார் அக 20 தோழியே கடற்கரையின் மணல் மேட்டில் உள்ள புன்னை மரத்தின் இனிய நிழலில் தங்குவோம் நம் தந்தை