பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் ஒடாப் பூட்கை வேந்தன் பாசறை, ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த ஒடைஒண் சுடர் ஒப்பத் தோன்றும் பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், பரியுடைய நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் புன்னை.அம் கானல் புறந்தை முன்துறை வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன அம்பல் வாய்த்த தெய்ய - தண்புலர் வைகுறு விடியல் போகிய எருமை நய்தல் அம் புது மலர் மாந்தும் கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!

- உலோச்சனார் அக 100 மற்ற நறுமணப் பொருளுடன் கூட்டி அரைக்கப் பெற்ற சந்தனத்தைப் பூசி உயர்வுடைய மலர் மாலையைப் பூண்ட மார்பை உடையவனே! நீ இரவில் நாள்தோறும் வந்து மார்பு வடு உண்டாகுமாறு தலைவியைத் தழுவிவிட்டுப் போதல் எமக்கு மிகவும் இனிதாகும். என்றாலும், பெரிய அலையின் ஒலியுடன் இயக்கம் அற்றிருக்கும் கடலையும் முகிலையும் உடைய இரவில் கொழு மீனைப் பிடிப்பவர் ஆகிய பரதவர் கரிய கடலில் தம் தோணியில் உள்ள இருள் நீங்குவதற்குக் காரணமான ஒளியுடைய விளக்குகள், புறங்காட்டி ஓடாத கொள்கையைக் கொண்ட மன்னனின் பாசறையில் உள்ள ஆடும் இயல்புடைய யானைகளின் முகத்தில் கட்டப்பட்ட பொன்னால் ஆன முகபடாங்களின் ஒள்ளிய சுடர் போல் தோன்றும் அத்தகைய இடம், பாடி வருபவரை வளைத்துக் கொள்ளும் கைவண்மை பெற்ற மன்னனான குதிரைகள் பூண்ட சிறந்த தேரையுடைய பெரியன் என்பவனின், மலர்கள் மலர்ந்த கொத்துகளைப் பெற்ற புன்னை மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த புறையாற்றின் கடல்துறையில் உள்ள