பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

183


அடிப் பகுதியைக் கொண்ட தாழையின் முள்ளாகிய பற்களை பெற்ற நீளமான பல புற இதழ்கள் காக்க, அதன் வயிற்றை இடமாக உற்ற அரும்பு விரிந்து, புலால் நாற்றத்தைத் தாக்கி ஒழித்த மலர் மணம் கமழும் இடம் அந்த இடத்தில் - பரவிய அலைகள் கொணர்ந்து வீசிய குளிர்ந்த ஒளியை யுடைய முத்துகள், விரும்பும் நடையைப் பெற்ற குதிரையின் காலை வடுவுண்டாக்கி அதன் நடையைக் கெடுக்கும் இவ் இயல் புடைய நல்ல தேரையுடைய பாண்டியனின் கொற்கை என்னும் கடல் துறையில் உள்ள வண்டால் வாய் திறக்கப் பெற்ற வளைந்த கழியிடத்துள்ள நெய்தல் மலர் தோல்வி கண்ட தலைவியின் அழகிய ஒளி பொருந்திய முகத்தில் உள்ள கண்களின் செருக்கிய பார்வையை முன்னே நின்று பார்த்தால் இவ்வாறு கழறிக் கூற மாட்டீர்! என்று தன் தோழனுக்குத் தலைவன் சாற்றினான்.

283. துன்பத்துக்குக் காரணம் பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளைசாற்றி, என்றுழ் விடர குன்றம் போகும் கதழ் கோல் உமணர் காதல் மடமகள் சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, 'நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச் சேரி விலைமாறு கூறலின், மனைய விளி அறி. ஞமலி குரைப்ப வெரீஇய மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர வாங்கும் தந்தை கை பூண் பகட்டின் வருந்தி, வெய்ய உயிர்க்கும் நோய்ஆ கின்றே:- அம்மூவனார் அக 140 பெரிய கடலில் மீன் பிடிக்கும் சிறு குடியில் வாழும் பரதவர் பெரிய உப்பங்கழியான வயலில் உழாமலேயே விளைவித்த வெண்மையான உப்பினது விலையைச் சொல்லிக்