பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

193


யாணர்த் தண் பணை உறும் எனக் கானல் ஆயம் ஆய்ந்த சாய்இறைப் பணைத் தோள் நல் எழில் சிதையா ஏமம் சொல்இனித் தெய்ய யாம் தெளிவு மாறே.

- மதுரை மருதன் இளநாகனார் அக 220

தலைவ, ஊரிலும் சேரியிலும் ஒன்றாய் அலர் எழத் தேரோடும் பலகால் வந்தாய்! பணிந்த சொற்களை உரைத் தாய் என்றும் நீங்காத வேள்வித் தீயையுடைய செல்லுரில்', மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர் முனையிலே அழிய மன்னர் பரம்பரையை அழித்தவன் பரசுராமன் அவன் முன் காலத்தில் அரிதாய் முயன்று செய்த வேள்வியில் கயிற்றால் சுற்றப்பட்ட அழகையுடைய காவலைக் கொண்ட நீண்ட துணைப் போல் எல்லாரும் காண இயலாத சிறந்த அழகைப் பெற்ற எம் தலைவியின் மார்பு அதனை நினையுந் தோறும் நடுங்கும் நெஞ்சினைக் கொண்டவனாய் இவ்வாறு புறத்திலே நின்று வருந்துகின்றாய்

ஆதலால் ஒலிக்கும் கடலினது நீர்ப் பெருக்குக் காலைப் பொழுதில் பெருகிச் சுழலும் நெய்தல் நிலம் அங்குப் பல நெற்கூடுகள். இத்தகைய இயல்பினது ஊணுார். அங்கு ஒன்றை ஒன்று பிரிதலைப் பொறுத்துக் கொள்ளாத பரிய மகன்றில் பறவையைப் போல் ஒருவர் நெஞ்சில் ஒருவர் பொருந்திக் காதல் நீங்காத அழகிய புணர்ச்சியால், பெரிய கழியைத் துழவி முகந்த நேரிய கோல்களைக் கொண்ட அழகிய வலை வளைந்த புறத்தையுடைய இறால் மீனுடன் பிற மீன்களையும் குவிக்கும் நீண்ட கதிர்களை யுடைய "சாய்க் கானம்’ என்ற ஊரில் உள்ள அழகிய குளிர்ந்த மூங்கிலை ஒக்கும் என்று கடற்கரைச் சோலையில் தோழிமார் ஆராய்ந்து பாராட்டிய, வளைந்த முன் ையையுடைய பருத்த இவளு டைய தோள்கள் நல்ல அழகு கெடாமைக்குக் காரணமான பாதுகாவலை யாம் தெளிய உணருமாறு இப்போது நீ உரைப்பாயாக, என்று இரவு வந்து மீளும் தலைவனிடம் தோழி இவ்வாறு வினவினாள்