பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

195


சிறிய அளவில் அசைத்தனள், என்று தலைமகளைக் கண்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறினான்

293 வருக பகற் பொழுதில்

செவ் வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினைத் தனிப்பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, இனிப் புலம்பின்றே கானலும், நளிகடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே, அந்தில் அணங்குடைப் பணித்துறை கைதொழுது ஏத்தி, யாயும் ஆயமோடு அயரும், நீயும், தேம் பாய் ஒதி திரு நுதல் நீவி, கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, இன் துயில் அமர்ந்தனை.ஆயின், வண்டுபட விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர் பூ வேய் புன்னை அம் தண் பொழில் வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. Wh

- எழுஉப்பன்றி நாகன் குமரனார் அக 240 செந்நிறப் பூக்கள் மலர்ந்துள்ள புலிநகக் கொன்றை மரத்தின் கரிய கொம்பின் பெரிய கிளையில், தனியே இருக்கும் தன் குஞ்சை நினைத்த தாழப் பறக்கும் நாரை, நீல மணி போன்ற நெய்தல் மலர்களையுடைய கரிய கழியினின்றும் மேலே எழுந்து பறந்தது; அதனால் கடற்கரைச் சோலையும் இப்போது தனிமை அடைந்தது. கடலாகிய அலையுடைய சுரத்தில் திரிந்து வருந்திய திண்மையான படகின் விளக்கொளி யில் தான்் பிடித்த பல மீன் கூட்டங்களை என் தமையர்க்குக் காட்டுவதற்காக இரவில் என் தந்தையும் வீட்டுக்கு வருவார் என் அன்னையும் ஆயத்தாருடன் தெய்வம் பொருந்திய துறையில் கையால் வணங்கித் துதித்து விழாக் கொண்டாடு

ᎧaᏗfᎢ❍Ꭲ

தேன் சிந்தும் கூந்தலைப் பெற்ற தலைவியினது அழகிய நெற்றியைத் தடவிக் கோங்க மர அரும்பைப் போன்ற குவிந்த