பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


இதழ்கள் குவியவும், சோலை சூழ்ந்த மனையில் உள்ள புன்னை மரத்தின் நறுமண மலர் பொன்னிறம் உடையதாய் விரியவும், பகற்போதை மெல்லப் போக்கி ஞாயிற்று மண்டி லம் வெம்மை குறைய இரவு வரின், இவள் நிலை என்ன வாகுமோ என்று தோழி உரைத்தாள் "முதிய மரத்தில் எப்போதும் நீங்காமல் தங்கி முழங்கும் வாயையுடைய பேராந்தை விரைவாய்க் குழறி ஒலிப்பதும், பேய் திரிவதும் ஆகிய பாதி இரவில், நெஞ்சம் உருகும் துன்பத்தைச் செய்த அன்பற்றவனின் அறிவுடைய மொழியை உண்மை என நம்பினேன்” எனத் தலைவி தலைவன் கேட்பத் தோழியிடம் உரைத்தாள்

296. விரைவில் மணக்க!

இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் மெல் அம் புலம்ப நெகிழ்ந்தன, தோளே, சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, கொய்சுவற் புரவிக் கைவண் கோமான் நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, அம் மா மேனி தொல் நலம் தொலைய, துஞ்சாக் கண்ணள் அலமரும், நீயே, கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் சேவலொடு புணராச் சிறு கரும் பேடை இன்னாது உயங்கும் கங்குலும், நும் ஊர் உள்ளுவை நோகோ, யானே.

- சாகலாசனார் அக 270 புலால் நாற்றம் வீசும் சிறிய குடில்களை உடைய பாக்கத் தில் கூட்டமான மீன் வேட்டையாடுபவர் உப்பங் கழியில் மலர்ந்த வளமுடைய நீலப் பூக்களைப் புலிநகக் கொன்றை மலர்களுடன் சூடுவர் இத்தகைய மென்மை நிலமான நெய் தல் நிலதலைவனே!