பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

201


என் தோழியே, கரிய குழம்பான சேற்றினை யுடைய வயலில் காலை வேட்டைக்குப் போன கொழு மீனான உணவைப் பெற்ற சிறுவர் இட்ட நுட்பமான கயிற்றால் ஆன வலையிலே சேவல் அகப்பட்டுக் கொண்டது சூட்டை யுடைய அக் கொக்கின் பசுமையான காலைக் கொண்ட பெண் கொக்கு தனியாய் இருக்கும்போது இரையைத் தின்னாது தன் குஞ்சினைத் தழுவி அழகிய இடத்தையுடைய பனை மரத்தில் அன்பு தோன்ற ஒலிக்கும் இவ் இயல்புடைய சிறிய பலவான பழைய குடிகளைக் கொண்ட கடற்கரையை உடையவன் நம் தலைவன்.

உப்பங்கழியைச் சார்ந்த புன்னையின் பூக்கள் பொருந்திய சோலையில் அன்பு நீங்காத நெஞ்சை உடையவனாய் வந்து நம்மைக் கூடுவதற்கு முன்னும் என் கண்கள், வெண்மையான தந்தத்தைப் பெற்ற யானையையும் போர் வெற்றியையும் கொண்ட சேரன் செங்குட்டுவனின் தெளிவான அலைகளை யுடைய தொண்டி என்ற துறைமுகத்தில், வண்டு தேனை உண்ண மலர்ந்த பெரிய நெய்தற் பூவின் நீல மணியைப் போன்ற அழகிய நிறம் நீங்கிப் பொன் நிறத்தைக் கொண்டன இதன் காரணம் யாதோ? என்று இரவில் வந்த தலைவன் அறியத் தலைவி தோழியிடம் இயம்பினாள்

299. வருக எம் மனைக்கு நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், பறி கொள் கொள்ளையர், மறுக உக்க மீன்ஆர் குருகின் கானல் அம் பெருந்துறை, எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல் செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவிச், செல்இனி, மடந்தைநின் தோழியொடு, மனை' எனச் சொல்லியஅளவை, தான்் பெரிது கலுழ்ந்து தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப் பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,