பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மென்மை நிலமான நெய்தல் நிலத்தையுடைய நம் தலைவன். கழியில் உள்ள மலர்களைப் பறித்தும், கடற்கரைச் சோலையில் தங்கியும், மணலில் வண்டற்பாவை செய்து விளையாடியும், இன்பம் அடையப் பலகால் வந்து கூடியும், சிறுமை விளங்கப் பணிந்தும், குற்றம் இல்லாத நம் துயரை அறியாமல் தளர்ந்த மனத்துடன் தன் துயரம் வெளிப்படச் செல்வான் அந்தோ! அவ்வாறு செல்பவன் சென்ற திக்கில் இரங்கி முன்னே நின்று செல்லாதே என்று தடை செய்யச் சென்றதான் என் உறுதியில்லாத நெஞ்சமானது அத் தலைவனைப் போய் அடைய வில்லையோ? ஒருவேளை அடைந்தும் நம் காமத்தை அவனுக்குச் சொல்ல நாணம் கொண்டதோ?

அவர் ஏறிச் சென்ற தேர் உங்கே தோன்றுவதைக் காண் பாயாக. வெண்மையான மணல் குவிந்த குவியல் மீதும் மணல் மேட்டில் உள்ள தாழைச் செடிகள் மீதும், அடும் பின் பசுமையான கொடிகள் அறுபட அவற்றின் மீது ஏறியும் இறங்கியும், சிறு குடியினரான பரதவர் கடலில் செலுத்திய விரைந்து செல்லும் வளைந்த மீன் படகு போல உயர்ந்து தோன்றும் தோற்றத்துடன் அப்பால் போய் மறைந்தது, என்று தோழி தலைவியின் துயர் தவிர்க்கத் தலை வனிடம் விளம்பினாள்.

303. இரவில் தங்குக எம் இல்லத்தில் பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, வலவன் வண் தேர் இயக்க, நீயும் செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம - செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, கழியே ஒதம் மல்கின்று வழியே வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என