பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

219


அக் கணவர், வருந்தின எம் பொல் களவிலே புணர்ச்சி இல்லாமல், பாராட்டப்படும் நனவிற் புணர்ச்சியில் பெற்ற புதிய நலத்தைப் போக்கமாட்டாய்

அழகு பொருந்திய தாழ்வான கிளைகளில் தம் இருப் பிடத்தே பெட்டையும் சேவலுமாகக் கூடிப் பறவைகள் ஆரவாரம் செய்ய அவையே அல்லாமல் மற்றப் பகைகளா லும் வருத்தம் உற்ற நெஞ்சத்தை உடையோம் யாம் எம் புன்மையைப் பாராட்டும் நீ நாங்கள் இறந்து விடாதபடி செய்து புதுமையாகப் பாராட்டும் நீ அழகுடைய கணவருடன் கூட்டத்தையுடைய மகளிரின், கொடியை உடைய நறுமண முல்லையினுடைய முகத்தை வண்டுகள் திறந்தாற் போல் ஆடவரால் திறக்கப்படும் முறுவலையும் போக்க மாட்டாய்.

நம்மைப் பிரிந்து உள்ளீடு இல்லாத உள்ளத்தால் நம்மை எண்ணாமல் போன உள்ளே உள்ளே மகிழ்ந்து நினைக்கும் நம் நெஞ்சமும் அம் மாலையயும் ஊரார் கூறும் அலரையும் பொறுக்காது நம்மை விட்டுப் போகின்றது இனி என் செய்வோம்! என வருந்தித் தலைவி தோழியிடம் கூறினாள்

311. காலை ஆவது அறியார் அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப் பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர, இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர, நிலவுக் காண்பது போல அணி மதி ஏர் தர, கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப, தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச, முறுவல் கொள்பவை குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென, பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின் கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, மாவதி சேர, மாலை வாள் கொள, அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து செந் தீச் செவ்அழல் தொடங்க - வந்ததை வால் இழை மக்ளிர் உயிர் பொதி அவிழ்க்கும் காலை ஆவது அறியார், மாலை என்மனார், மயங்கியோரே. - கலி 19