பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

223


89. விரைய வந்து மணந்துகொள்! ஒண் சுடர் சேர உலகு ஊரும் தகையது, தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம், தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர, புள்ளினம் இரை மாந்திப் புகல் சேர ஒலி ஆன்று, வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங் கழி பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப தாங்கருங் காமத்தைத் தணந்து நீ புறம் மாற, தூங்கு நீர் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே - உறையொடு வைகிய போது போல், ஒய்யென நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு. வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு - ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமேகமழ் கண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு. இன் துணை நீ நீப்ப, இரவினுள் துணையாகி

தன் துணைப் பிதிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே - ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான்், ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு. என ஆங்கு எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து, சாயினள் வருந்தியாள் இடும்பை பாய் பரிக் கடுந் திண் தேர் களையினோ இடனே.

- கலி 121 ஒளியுடைய ஞாயிறு அத்தகிரியைக் சேர்வதாலும், உலகம் முழுவதும் பரவும் தன்மையுடையதாகித் தெளிந்த கடற் பரப்பில் அலையை நீக்கித் தோன்றும் குளிர்ந்த கதிரை யுடைய மதியத்தின் நிலவு ஒளி மிகுதலாலும், பறவைகள் இரையைத் தின்று தாம் தங்கும் கூடுகளைச் சேர்தலால் ஆரவாரம் அடங்கப் பெற்று வளமான இதழ்களும் குவிந்த